search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளகவி கிராமத்திற்கு சாலை"

    • கொடைக்கானலில் இருந்து 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது வெள்ளகவி மலைக்கிராமம்
    • பல ஆண்டுகளாக இந்த பகுதி மக்கள் சாலை வசதி கோரி பல்வேறு போராட்டங்கள் செய்துவந்த நிலையில் தற்போது சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகே உள்ளது வெள்ளகவி மலைக்கிராமம். கொடைக்கானலில் இருந்து 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது மிகப்பழமையான இந்த மலைக்கிராமம். இக்கிராமத்திற்கு செல்ல பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை.

    இங்குள்ள விவசாய விளைபொருட்களை மலைக்கிராம மக்கள் தலைச்சுமையாகவும், குதிரைகள் மூலமாகவும் கொடைக்கானல் மற்றும் பெரியகுளம் பகுதிக்கு கொண்டு சென்று விற்று வாழ்ந்து வருகின்றனர். இந்த மலை கிராமத்தில் 500 குடும்பத் திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். சாலை வசதி இல்லாத காரணத்தினால் இந்த மலைக்கிராமத்தை சேர்ந்த பலர் இந்த ஊரை விட்டு வெளியூர்களுக்கு சென்று அங்கேயே தங்கி விட்டனர்.

    பல ஆண்டுகளாக இந்த பகுதி மக்கள் சாலை வசதி கோரி பல்வேறு போராட்டங்கள் செய்துவந்த நிலையில், பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமாரின் முயற்சியினால், கொடைக்கானல் ஆர்.டி.ஓ முருகேசனின் தனிப்பட்ட நடவடிக்கையாலும் தற்போது மண் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    கடந்த சில மாதங்களாக இந்த பணி பல்வேறு தடைகளையும், வனத்துறையின் எதிர்ப்பையும் மீறி நடைபெற்று வருகிறது. சுமார் 12 கி.மீ அளவிற்கு இந்த சாலை பணி முடிவுற்ற நிலையில், இன்னும் ஓரிரு கி.மீ தூரம் மண் சாலை அமைத்தால் இந்த பணி முடிவு பெறும். இருப்பினும் மண் சாலையில் வாகனங்கள் பயணிக்க முடியாது.

    எனவே சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் இந்த மக்கள் சாலை வசதி இன்றி இருந்து வரும் நிலையில் தற்போது மண் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த மண் சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு பரிசீலனை செய்து இதற்கு தனி நிதி ஒதுக்கி உடனடியாக தார் சாலை பணிகளை தொடங்க வேண்டும் என்றும் வெள்ளகவி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×